வணக்கம்,
சித்த மருத்துவம் பல தாவர விதைகளை, மொட்டுக்களை, வேர்களை
ஆண்மை அபிவிருத்திக்கான மருந்துகளில் அதிகம் சேர்க்கிறது. சப்ஜா
விதை, வெட்பாலை விதை, பூனைக்காலி விதை, மராட்டி மொக்கு,
மதனகாமேஸ்வரப் பூ, அமுக்குராங்கிழங்கு, சாலாமிசிரி வேர்,
நிலப்பனைக் கிழங்கு என அதன் பட்டியல் நீளும். வளம் குன்றிய தேரி
நிலத்தில் வளரும் நெருஞ்சில் முள்ளின் சப்போனின்கள்,
விந்தணுக்களை உற்பத்தி செய்யும் செர்டோலி செல் பாதிப்பைச்
சீராக்கும் என்கிறது மருத்துவத் தாவரவியல். அதேபோல் பூனைக்காலி
விதையும், சாலாமிசிரியும், அமுக்குராங்கிழங்கும் அணுக்களை உயர்த்த,
டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களைச் சீராக்க எனப் பல பணிகள்
செய்வதை, நவீன உலகம் உற்றுப் பார்க்கிறது.பிரச்னை உற்பத்தியிலா,
பாதையிலா, மனதிலா என்பதை, உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசி
யுங்கள். அதன் பிறகு தேவைக்கு ஏற்ப உங்கள் உணவுப் பழக்கத்தைத்
தீர்மானியுங்கள்.மிக முக்கியமாக, புரிதலிலும் விட்டுக்கொடுத்தலிலும்
மட்டுமே தாம்பத்ய பயிர் வீரியமாக விளையும். கருத்தரிப்பைச்
சாத்தியப்படுத்துவதில், உறுப்பின் அளவைக் காட்டிலும் மனதின்
அளவுக்குத்தான் ஆண்மை அதிகம் உண்டு. ஆதலால் காதல் செய்வீர்...
ஆரோக்கியமாக!
மாதுளை வெல்கம் ட்ரிங்க், முருங்கைக் கீரை சூப், மாப்பிள்ளைச் சம்பா
சோற்றுடன் முருங்கைக் காய் பாசிப்பயறு சாம்பார், நாட்டு
வெண்டைக்காய்ப்
பொரியல்,
தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு... முடிவில் தாம்பூலம்...
இவை புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு.
உணவுகள்.
அதிகம். துத்தநாகச் சத்தை விலை உயர்ந்த பாதாம் மூலம்தான் பெற
வேண்டும் என்பது இல்லை. திணையும் கம்பும் நாம் அன்றாடம் சாப்பிடும்
அரிசியைவிட, துத்தநாகச் சத்து அதிகம் உள்ள தானியங்கள்.
நாட்டு வெல்லம், தேங்காய்த் துருவல் கலந்த காலை உணவுடன்
வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிடலாம்.
பெருக்கிக் கீரைகள்’ எனப் பட்டியலிட்டுச் சொன்ன முருங்கை,
தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை, பருப்பும்
தேங்காய்த் துருவலும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து சமைத்துச்
சாப்பிடுவது விந்து அணுக்களின் எண்ணிக்கையை நிச்சயம் உயர்த்தும்.
சேர்த்து அரைத்து, அரை டம்ளர் பாலில் கலந்து சாப்பிடுவது, உயிர்
அணுக்கள் உற்பத்தியையும் இயக்கத்தையும் சேர்த்துப் பெருக்கும்.
ஐரோப்பியர்கள் ஸ்ட்ராபெர்ரியையும், நம்மவர்கள் வாழைப்பழத்தையும்
நெடுங்காலமாகச் சொல்லிவந்துள்ளனர். பிற்காலத்தில் சோதித்ததில்,
செரடோனின் சுரக்கும் வாழைப்பழம், ஃபோலிக் அமிலம்கொண்ட
ஸ்ட்ராபெர்ரி, ஃபீனால்கள் நிறைந்த மாதுளைகள் காமம் கக்கும் கனிகள்
என்பது புரிந்தது!
கவனம்!
உடற்பயிற்சி.
கொடுக்கும்’ என ஷேக்ஸ்பியர் முதல் மாத்ருபூதம் வரை சொல்லிச்
சென்றிருக்கிறார்கள்.
உறுப்பும் (Buried Penis), கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயில் ஏற்படும்
ஆண்மைக்குறைவும் (Erectile Dysfunction) சமீபத்தில் ஆண்களுக்கான பெரும்
நோய்ச் சிக்கல்கள். இரண்டுமே முறையான சிகிச்சையால்
சரிசெய்யலாம்.
அணுக்களைப் பெருக்கும் பாரம்பர்ய உத்தி!

- உயிர் அணுவைப் பெருக்கும் மெனு!
மாதுளை வெல்கம் ட்ரிங்க், முருங்கைக் கீரை சூப், மாப்பிள்ளைச் சம்பா
சோற்றுடன் முருங்கைக் காய் பாசிப்பயறு சாம்பார், நாட்டு
வெண்டைக்காய்ப்
பொரியல்,
தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு... முடிவில் தாம்பூலம்...
இவை புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு.
- நாட்டுக்கோழியும் சிவப்பு இறைச்சிகளும் காமம் பெருக்கும் காம்போ
உணவுகள்.
- உயிர் அணு உற்பத்தியில் துத்தநாகச் சத்தின் (zinc) பங்கு
அதிகம். துத்தநாகச் சத்தை விலை உயர்ந்த பாதாம் மூலம்தான் பெற
வேண்டும் என்பது இல்லை. திணையும் கம்பும் நாம் அன்றாடம் சாப்பிடும்
அரிசியைவிட, துத்தநாகச் சத்து அதிகம் உள்ள தானியங்கள்.
- மாப்பிள்ளைச் சம்பா சிவப்பு அரிசி அவல், முளைகட்டிய பாசிப் பயறு,
நாட்டு வெல்லம், தேங்காய்த் துருவல் கலந்த காலை உணவுடன்
வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிடலாம்.
- சித்த மருத்துவம் 'காமம்
பெருக்கிக் கீரைகள்’ எனப் பட்டியலிட்டுச் சொன்ன முருங்கை,
தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை, பருப்பும்
தேங்காய்த் துருவலும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து சமைத்துச்
சாப்பிடுவது விந்து அணுக்களின் எண்ணிக்கையை நிச்சயம் உயர்த்தும்.
- 5-6 முருங்கைப் பூக்களுடன், பாதாம் பிசின், பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு
சேர்த்து அரைத்து, அரை டம்ளர் பாலில் கலந்து சாப்பிடுவது, உயிர்
அணுக்கள் உற்பத்தியையும் இயக்கத்தையும் சேர்த்துப் பெருக்கும்.
- 'மரத்தில் காய்க்கும் வயாகரா’ எனச் சீனர்கள் மாதுளையையும்,
ஐரோப்பியர்கள் ஸ்ட்ராபெர்ரியையும், நம்மவர்கள் வாழைப்பழத்தையும்
நெடுங்காலமாகச் சொல்லிவந்துள்ளனர். பிற்காலத்தில் சோதித்ததில்,
செரடோனின் சுரக்கும் வாழைப்பழம், ஃபோலிக் அமிலம்கொண்ட
ஸ்ட்ராபெர்ரி, ஃபீனால்கள் நிறைந்த மாதுளைகள் காமம் கக்கும் கனிகள்
என்பது புரிந்தது!
கவனம்!
- நீச்சல் பயிற்சி, ஆண்மையைப் பெருக்கும்
உடற்பயிற்சி.
- 'குடி, குடியைக் கெடுக்கும்; குழந்தை யின்மையைக்
கொடுக்கும்’ என ஷேக்ஸ்பியர் முதல் மாத்ருபூதம் வரை சொல்லிச்
சென்றிருக்கிறார்கள்.
- உடல் எடை அதிகரிப்பில் புதைந்துபோகும் ஆண்
உறுப்பும் (Buried Penis), கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயில் ஏற்படும்
ஆண்மைக்குறைவும் (Erectile Dysfunction) சமீபத்தில் ஆண்களுக்கான பெரும்
நோய்ச் சிக்கல்கள். இரண்டுமே முறையான சிகிச்சையால்
சரிசெய்யலாம்.
- நல்லெண்ணெய்க் குளியல், பித்தத்தைச் சீராக்கி விந்து
அணுக்களைப் பெருக்கும் பாரம்பர்ய உத்தி!
No comments:
Post a Comment